ADDED : மார் 27, 2023 09:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெளிந்த நீரோடையில் மீன்கள் நீந்துவதை பார்க்கலாம். எவ்வளவு அழகாக எதிர் நீச்சல் போட்டு வாழ்கின்றன. எப்போதும் அது சுறுசுறுப்பாகவே இருக்கும். ஆனால் அதே நீரில் இறந்த மீன்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. தண்ணீர் எந்தத்திசையெல்லாம் அடித்துச் செல்கின்றதோ அதன்போக்கிலே போகும். அது போலத்தான் மனித வாழ்க்கை. சோம்பேறியாக இருப்பவர்கள் இறந்த மீன் போல குறிக்கோள் இல்லாது வாழ்வர். அவர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது. குறிக்கோளுடன் வாழ நினைப்பவர்களுக்கு தேவன் ஆசி உண்டு என்கிறது பைபிள்.

