ADDED : மார் 14, 2023 12:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தவறு செய்தவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சி தண்டனை வழங்குவது அந்த நாட்டின் வழக்கம். உயிர் பிழைத்தவர்களை அதிர்ஷ்டசாலி என விடுவித்து விடுவர்.
ஒரு முறை மூன்று பேரை குற்றவாளி என தீர்மானித்தது அந்நாட்டு நீதிமன்றம். தண்டனையில் இருந்து இருவரும் தப்பினர். மூன்றாமானவர் '' ஒயர்கள் அறுந்து கிடக்கிறது'' என சொல்ல அதிகாரிகள் தண்டனையை நிறைவேற்றினார். எதை எங்கு எப்போது பேச வேண்டும் என்பது தெரியாமலே பலர் வாழ்கின்றனர். எல்லோரும் தேவையான நேரத்தில் தேவையானதை பேசினால் எப்போதுமே அதிர்ஷ்டம் தான்.

