
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புத்தகம் என்பது அறிவை வளர்க்கும் பொக்கிஷம். இதனால் சலனமில்லாத அமைதியும், பொறுமையும் நமக்கு உண்டாகும். பிரச்னைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றலையும் தரும். புத்தக படிப்பினால் பல மேதைகள் உருவாகி இருக்கின்றனர். அதில் ஒருவர்தான் கிரேக்கத்தை சேர்ந்த மாவீரர் அலெக்ஸாண்டர். இவர் ஒருமுறை தங்கக் கிண்ணத்தை அவையில் காட்டினார்.
அப்போது, ''இந்த கிண்ணத்தில், எதை வைத்தால் பொருத்தமாக இருக்கும்'' எனக் கேட்டார்.
ஒவ்வொருவரும் பல பொருட்களை கூறினாலும், அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஏமாற்றம் அடைந்தவர்கள், அவரிடமே விடையை கேட்டனர்.
''கிரேக்க இலக்கியமான 'இலியத்' என்னும் காவியமே ஆகும்'' என அலெக்ஸாண்டர் சொன்னார்.

