
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொழுதோ காலை. வாசனையான மலர். கேட்க வேண்டுமா வண்டுக்கு... மலரை சுற்றி ரீங்காரமிட்டன. மாலை பொழுது வந்தது. மலரோ வாடியது. இதமான இளந்தென்றல். மென்மையான மலரோ உதிர்ந்தது.
இதைப் போன்றதே நம் வாழ்க்கையும். வாழும் காலத்தில் பிறருக்கு உதவி செய்தால், நம்மை பலரும் சூழ்ந்து கொள்வர். அந்த மலரைப் போல் மரணத்தை விரும்பி ஏற்றால், வாழ்க்கையும் இனிக்கும்.

