
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்பம், துன்பம் கலந்ததே வாழ்க்கை. இது பலருக்கும் புரிவதில்லை. பிறர் நம்மை விட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என நினைக்கின்றனர். ஆனால் அவர்களுடன் பழகினால் தெரியும். அவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்று.
'ஆண்டவரே... இதை என்னால் தாங்கமுடியவில்லை. வேறு ஏதாவது என்றால் சமாளித்து இருப்பேனே' என சிலர் புலம்புகின்றனர். இதுவே அந்தக்கஷ்டம் தீர்ந்துவிட்டால் போதும். மீண்டும் பழைய மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். எனவே எப்போதும் நன்றியுணர்வுடன் இருங்கள். வாழ்க்கை நலமாக அமையும்.

