/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய...
/
மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய...
ADDED : டிச 02, 2022 01:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த உலகில் விலை கொடுத்து வாங்க முடியாதது அன்பாகும். நமது ஆற்றல், மனவலிமை ஆகியவற்றிற்கு இதுதான் உறுதுணையாக நிற்கிறது. இது நம் வாழ்விற்கு அர்த்தத்தையும் கொடுக்கிறது. ஆனால் இதை பலரும் உணராமல் பணம், பதவி, புகழ் என அழியும் பொருட்கள் மீது ஆசை வைக்கின்றனர். முதலில் இவை நன்மை அளிப்பது போல தோன்றினாலும் முடிவில் துன்பத்தைத்தான் ஏற்படுத்தும். ஆனால் அன்பு வழியில் நடந்தால் எல்லாம் நல்லதாகவே நடக்கும். அதாவது பிறரது துன்பத்தை தீர்ப்பது, உயிர்கள் மீது இரக்கம் காட்டுவது, பசித்தவர்களுக்கு உணவளிப்பது போன்ற செயல்களால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

