
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமண நாள், பிறந்த நாள் என கொண்டாட்டங்களின் போது விருந்தளிக்கும் நேரத்தில் ஏழைகள், அனாதை குழந்தைகளை கூப்பிடுங்கள். அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வர். இதற்கு கைம்மாறு செய்ய அவர்களிடம் ஏதும் இருக்காது.
இதனால் நமக்கு எந்தவித பயனும் இல்லையே என வருந்தாதீர்கள். அதுதான் பல மடங்கு பலனைக் கொடுக்கும். ஆம்! ஏழை, எளியவர்களுக்கு செய்யும் உதவிதான் ஆண்டவருக்கு மகிழ்ச்சி தரும்.

