/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
/
எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
ADDED : செப் 23, 2022 09:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்டீபன் கடற்கரையில் நின்றிருந்தான். அப்போது அலையினால் தள்ளப்பட்ட மீன்கள் கரையில் தத்தளித்துக் கொண்டிருந்தன. இதைப் பார்த்தவன் ஒவ்வொரு மீன்களாய், கடலில் விட ஆரம்பித்தான். இதை கவனித்த ஒருவர், ''தம்பி! உனக்கு பைத்தியமா பிடித்திருக்கு. இன்று முழுவதும் நீ முயற்சி செய்தாலும், அனைத்து மீன்களின் உயிரை காப்பாற்றவே முடியாது'' என்றார்.
உடனே ஒரு மீனை கையில் எடுத்து, ''இந்த உயிரை காப்பாற்றும் மனநிறைவே எனக்கு போதும்'' என்று சொல்லி அதை கடலில் விட்டான். அவனால் உயிர் பிழைத்த மீன்கள், 'தரை மேல் இருந்த அவன், எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்' என்று வாழ்த்தின.

