
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு செடியில் பட்டுப்புழுவும், சிலந்தியும் கூடு கட்டின. சிலந்தி வேகமாக பணியை முடித்தது. பட்டுப்புழுவோ மெதுவாக கட்டிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த சிலந்தி, ''பார்த்தாயா... நான் எப்படி சுறுசுறுப்பாக செயல்பட்டு பணியை முடித்துவிட்டேன். ஆனால் உன்னால் கூடு கட்ட முடியவில்லை'' என கேலி செய்தது.
அதற்கு பட்டுப்புழு, ''உங்கள் கூட்டால் யாருக்கு பயன் இருக்கப்போகிறது. என் வலை பட்டு நுாலாகி பயன் தரும். ஒரு வேலையை வேகமாக செய்வதைவிட, அதனால் கிடைக்கும் பயன்தான் முக்கியம்'' என்றது.

