
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். எங்கு சென்றாலும் செருப்பு அணியாமல்தான் செல்வார். அவ்வப்போது செருப்புக் கடைக்கு சென்று, விதவிதமான செருப்புகளை பார்ப்பார். ஆனால் எதையும் வாங்கவே மாட்டார்.
இதை கவனித்த சீடன், ''ஐயா... எதற்காக இப்படி செய்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லையே'' எனக்கேட்டான்.
சிரித்துக்கொண்டே அவர், ''இந்தப் பொருள் இல்லாமல் என்னால் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது. எனவே இதுமாதிரி என்னென்ன பொருட்கள் அங்கு உள்ளது என பார்க்க செல்கிறேன்'' என்றார்.
பார்த்தீர்களா... இப்படி இருந்தால் நீங்களும் மனநிறைவாக வாழலாம். அதாவது பொருட்கள் குறைவானால் மனம் நிறைவாகும்.

