
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனதில் 'பொறாமை' என்னும் தீயகுணம் நுழைந்துவிட்டால், வாழ்க்கையில் முன்னேறுவது கஷ்டம். ஒருவரது இயலாமைதான் இந்தக் குணம் தோன்றுவதற்கு காரணம். எப்படி என்றால், ஒருவருக்கு வீடு வாங்கும் வாய்ப்பு இல்லை. அவர் என்ன செய்வார்? புதிதாக வீடு வாங்குபவரை பார்த்து பொறாமைப்படுவார்.
இதுபோல் தன்னால் முடியாத ஒன்றை, பிறர் செய்தால் பெறாமை என்னும் தீ மனதில் எரிகிறது. இது தொடர்ந்தால் நல்ல மனம் கூட அதற்கு இரையாகிவிடும். எனவே பொறுமையாக இருந்து, இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழுங்கள்.

