
பேரழிவுகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று ஆண்டவர் தரும் ஆலோசனை என்ன?
லூக்கா 21ம் அதிகாரத்தில் இதற்கு ஒரு வழியை சொல்லி இருக்கிறார். ''பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப் போல் வரும். ஆகையால், சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷ குமாரனுக்கு முன்பாக நிற்க பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்''.(லூக்கா 21: 35,36)
அழிவுகளில் இருந்து நம்மைக் காப்பாற்ற, ஜெபம் போதுமானதா என்ற கேள்வி எழும். அது நியாயமானது தான். தேவனுடைய பிள்ளைகள் அன்று மட்டுமின்றி இன்று வரை இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்டதாக சரித்திரமில்லை.
பெரு வெள்ளத்தில் நோவா, பூகம்பத்தில் மோசே, பஞ்சத்தில் எலியா, புயல் காற்றில் சிக்கிக் கொண்ட பவுல் என்று நீண்ட பட்டியலே சொல்லலாம். ஏன் கடலில் போடப்பட்ட யோனா கூட காப்பாற்றப்பட்டார். ஆகவே, ஆபத்தின் மத்தியில் வாசம் செய்கின்ற நாம் தேவனைச் சார்ந்து வாழ்வோம். விழித்திருந்து ஜெபிப்போம்.