ADDED : ஜன 15, 2013 10:42 AM
'மகிழ்ச்சி' என்ற ஊற்று எங்கே இருக்கிறது எனத் தேடி இந்த உலகம் அலைந்து கொண்டிருக்கிறது. அதை அடைவதற்காக, எதைச் செய்யவும் துணிச்சலோடு செயல்படுகிறது. ஆனால், அப்படிப் பெற்றுக்கொண்ட சந்தோஷம், அதை நாடி, தேடி போராடிய அளவுக்கு திருப்தி தருவதில்லை. கடலின் ஓயாத அலை போல, மனமானது இன்னும் மகிழ்ச்சி கிடைக்குமா என்று தேடித்தான் ஓடுகிறது.
நிறைவான சந்தோஷத்தை இந்த உலகம் தவறான இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறது,'' என்கிறார் டாக்டர் பில்லிகிரஹாம். இயேசு கிறிஸ்துவும் இதையே நமக்கு சொல்லியிருக்கிறார். ''நீங்கள் அப்பம் அல்லாததற்காக பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்கு கவனமாய் செவிகொடுத்து, நலமானதை சாப்பிடுங்கள். அப்போது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சி யாகும்,'' என்கிறார்.
நிஜமான சந்தோஷம் என்பது இயேசுகிறிஸ்துவின் வழிமுறைகளை பின்பற்றி மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்தான் இருக்கிறது.