ADDED : ஜன 15, 2013 10:43 AM

எந்தெந்த இடத்தில் என்னென்ன எச்சரிக்கை பலகை வைக்கலாம் என்பது குறித்து பைபிளில் இருந்து வசனங்களைத் தேர்ந்தெடுப்போமா!
நீதிமன்றங்களில் ''நியாயத்திலே முகத்தாட்சிணியப் பாராமலும், பெரியவனுக்கு செவி கொடுப்பது போல சிறியவனுக்கும் செவி கொடுக்கக்கடவீர்கள். மனிதன் முகத்திற்குப் பயப்படாதீர்கள். நியாயத்தீர்ப்பு தேவனுடையது'' (உபா1:17)
காவல்நிலையங்களில் நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள். யார் மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதுமென்றிருங்கள். (லூக்கா 3:14 பொது மொழி பெயர்ப்பு)
அரசு அலுவலகங்களில் நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும் போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே (நீதி3:27). உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதீர்கள். (லூக்கா 3:12)
மதுக்கடைகளில் சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக் கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! (ஏசா.5:11)
தேவனின் வார்த்தை இதழில் இருந்து..