தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பொருளாதாரம் சிறக்க...

பொருளாதாரம் சிறக்க...

பொருளாதாரம் சிறக்க...


ADDED : நவ 07, 2024 10:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 10:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்னதான் உழைத்து பணம் சம்பாதித்தாலும் செலவாகிவிடுகிறதா... கவலை வேண்டாம். திருஞானசம்பந்தர் அருளிய கீழ்க்கண்ட பதிகத்தை தினமும் காலை, மாலையில் படியுங்கள். சிவபெருமானின் அருளால் நிச்சயம் வறுமை நீங்கும். பொருளாதாரம் சிறக்கும்.

இடரினும் தளரினும் எனது உறு நோய்

தொடரினும் உன கழல் தொழுது எழுவேன்;

கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,

அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும் போய்

வீழினும் உன கழல் விடுவேன் அல்லேன்;

தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்

போழ் இளமதி வைத்த புண்ணியனே!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

நனவினும் கனவினும் நம்பா! உன்னை,

மனவினும் வழிபடல் மறவேன்; அம்மான்

புனல் விரி நறுங்கொன்றைப்போது அணிந்த

கனல் எரி அனல் புல்கு கையவனே

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,

அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்,

அம் மலர் அடி அலால் அரற்றாது என் நா;

கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்

மும்மதில் எரி எழ முனிந்தவனே!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,

அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

கையது வீழினும் கழிவு உறினும்,

செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்

கொய் அணி நறுமலர் குலாய சென்னி

மை அணி மிடறு உடை மறையவனே!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,

அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும்,

எந்தாய்! உன் அடி அலால் ஏத்தாது என் நா;

ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த

சந்த வெண்பொடி அணி சங்கரனே!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,

அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்,

அப்பா! உன் அடி அலால் அரற்றாது என் நா;

ஒப்பு உடை ஒருவனை உரு அழிய

அப்படி அழல் எழ விழித்தவனே!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,

அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும்,

சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்;

ஏர் உடை மணி முடி இராவணனை

ஆர் இடர் பட வரை அடர்த்தவனே

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,

அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்

ஒண் மலர் அடி அலால் உரையாது என் நா;

கண்ணனும் கடி கமழ் தாமரை மேல்

அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,

அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்

அத்தா! உன் அடிஅலால் அரற்றாது என் நா;

புத்தரும் சமணரும் புறன் உரைக்க

பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த

இலை நுனை வேல்படை எம் இறையை

நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன

விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்

வினை ஆயின நீங்கிப் போய்

விண்ணவர் வியன் உலகம்

நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us