தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனக்குழப்பம் தீர...

மனக்குழப்பம் தீர...

மனக்குழப்பம் தீர...


ADDED : நவ 14, 2024 02:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2024 02:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநாவுக்கரசர் பாடிய திங்களூர் பதிகத்தை பாடினால் மனக்குழப்பம் தீரும்.

ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை;

ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்;

ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது;

ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே.

இரண்டு கொல் ஆம் இமையோர் தொழு பாதம்;

இரண்டு கொல் ஆம் இலங்கும் குழை; பெண், ஆண்,

இரண்டு கொல் ஆம் உருவம்; சிறு மான், மழு,

இரண்டு கொல் ஆம் அவர் ஏந்தின தாமே.

மூன்று கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன;

மூன்று கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை;

மூன்று கொல் ஆம் கணை, கையது வில், நாண்;

மூன்று கொல் ஆம் புரம் எய்தன தாமே.

நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன;

நாலு கொல் ஆம் சனனம் முதல் தோற்றமும்;

நாலு கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள்

நாலு கொல் ஆம் மறை பாடினதாமே.

அஞ்சு கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்;

அஞ்சு கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன;

அஞ்சு கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை;

அஞ்சு கொல் ஆம் அவர் ஆடின தாமே.

ஆறு கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன;

ஆறு கொல் ஆம் அவர் தம் மகனார் முகம்;

ஆறு கொல் ஆம் அவர் தார்மிசை வண்டின் கால்;

ஆறு கொல் ஆம் சுவை ஆக்கினதாமே.

ஏழு கொல் ஆம் அவர் ஊழி படைத்தன;

ஏழு கொல் ஆம் அவர் கண்ட இருங் கடல்;

ஏழு கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள்

ஏழு கொல் ஆம் இசை ஆக்கினதாமே.

எட்டுக் கொல் ஆம் அவர் ஈறு இல் பெருங் குணம்;

எட்டுக் கொல் ஆம் அவர் சூடும் இன மலர்;

எட்டுக் கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன;

எட்டுக் கொல் ஆம் திசை ஆக்கினதாமே.

ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன;

ஒன்பது போல் அவர் மார்பினில் நுால் இழை;

ஒன்பது போல் அவர் கோலக் குழல் சடை;

ஒன்பது போல் அவர் பார் இடம்தானே.

பத்துக் கொல் ஆம் அவர் பாம்பின் கண், பாம்பின் பல்;

பத்துக் கொல் ஆம் எயிறு(ந்) நெரிந்து உக்கன;

பத்துக் கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை;

பத்துக் கொல் ஆம் அடியார் செய்கை தானே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us