
நவ.15 ஐப்பசி 29: லட்சுமி பூஜை. துளசி விரதம். பவுர்ணமி. சிவன் கோயிலில் அன்னாபிஷேகம். குருநானக் ஜெயந்தி. திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் தேர். திருப்போரூர் முருகன் பால் அபிஷேகம். சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம். நெடுமாற நாயனார் குருபூஜை.
நவ.16 கார்த்திகை 1: விஷ்ணுபதி புண்ணிய காலம். கார்த்திகை விரதம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி, அரியக்குடி சீனிவாசப்பெருமாள், வடமதுரை சவுந்தரராஜப்பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனத்தில் பவனி. கரிநாள்.
நவ.17 கார்த்திகை 2: முகூர்த்த நாள். திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.
நவ.18 கார்த்திகை 3: திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடனை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம். கரிநாள்.
நவ.19 கார்த்திகை 4: சங்கடஹரசதுர்த்தி. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கபூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு.
நவ.20 கார்த்திகை 5: முகூர்த்த நாள். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
நவ.21 கார்த்திகை 6: முகூர்த்த நாள். சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. தென்னை, மா, பலா, புளி வைக்க ஏற்ற நாள்.