ADDED : நவ 14, 2024 01:43 PM

* ஐயப்பன் வரலாற்றை சொல்லும் புராணம் பூதநாத புராணம். சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் ஐக்கியத்தில் உருவான அவதாரம் இவர்.
* பந்தள நாட்டின் மன்னர் ராஜசேகர பாண்டியன். இவர் பம்பை நதிக்கரை ஓரத்தில் கழுத்தில் மணியுடைய அழகான ஆண் குழந்தையை கண்டெடுத்தார். அதனால் குழந்தைக்கு 'மணிகண்டன்' எனப் பெயர் சூட்டினார்.
* மன்னர் ராஜசேகர பாண்டியன், கோப்பெருந்தேவிக்கு பிறந்தவர் ராஜராஜன். இவரே ஐயப்பனின் தம்பி.
* சாஸ்தா, தர்மசாஸ்தா, மணிகண்டன், ஹரிஹரசுதன், பூதநாதன், பூலோகநாதன், எருமேலி வாசன் என ஐயப்பனுக்கு பல பெயர்கள் உண்டு.
* நடை சாத்தும் போது ஐயப்பனுக்கு பாடும் பாடல் ஹரிவராசனம். இதைப் பாடியவர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சியை சேர்ந்த கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர்.
* ராமாயணத்தில் சரயு நதியும், கிருஷ்ணாவதாரத்தில் யமுனா நதியும் முக்கிய பங்கு வகிப்பதைப் போல் சபரிமலைக்கு பம்பைநதி முக்கிய பங்கு வகிக்கிறது.