sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பைரவர் - குறிப்புகள்

/

பைரவர் - குறிப்புகள்

பைரவர் - குறிப்புகள்

பைரவர் - குறிப்புகள்


ADDED : நவ 21, 2024 03:24 PM

Google News

ADDED : நவ 21, 2024 03:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பைரவருக்கு பிடித்தமானது சந்தனக்காப்பு. இதில் புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்துாரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரத்தை சேர்ப்பர்.

* காலையில் பைரவரை வழிபட்டால் நோய் நீங்கும். மதியம் வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். மாலையில் வழிபட்டால் பாவம் தீரும். இரவில் வழிபட்டால் வாழ்வு வளம் பெறும்.

* பைரவருக்கு சிவப்புத் துணியில் 9 மிளகை ஒரு முடிச்சிட்டு நல்லெண்ணெய் விட்டு தீபமேற்ற செல்வம் பெருகும்.

* தாமரை, வில்வம், தும்பை, சந்தன மாலைகளை பைரவருக்கு அணிவிப்பது சிறப்பு. செவ்வரளி, மஞ்சள், செவ்வந்தி, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு. மல்லிகையைத் தவிர்க்க வேண்டும்.

* சர்க்கரைப் பொங்கல், தயிர்ச்சாதம், தேன், செவ்வாழை, அவல் பாயசம், உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால், பழவகைகள் வைத்து வழிபடுவது சிறப்பு. .

* செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் என்பர். இவரது இடது கையில் அட்சய பாத்திரம் இருக்கும்.

* காசியின் காவல் தெய்வமான பைரவருக்கு பூஜை செய்த பிறகே காசி விஸ்வநாதருக்கு வழிபாடு தொடங்கும்.

* காசிக்கு செல்பவர்கள் கங்கையில் நீராடி விஸ்வநாதரை வழிபட்டு இறுதியாக காலபைரவரை தரிசித்தால் தான் யாத்திரைக்கான முழுபலன் கிடைக்கும்.

* 'அமர்தகர்' என்றும், 'பாப பக்ஷணர்' என்றும் பைரவர் அழைக்கப்படுகிறார். 'அமர்தகர்' என்பதற்கு ஆணவத்தை அழிப்பவர் என்றும், 'பாப பக்ஷணர்' என்றால் அறியாமையால் செய்த பாவங்களைப் போக்குவர் என்றும் பொருள்.

* தேய்பிறை அஷ்டமியன்று பைரவ விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்று செவ்வாயாக இருந்தால் மிகவும் நல்லது. தொடர்ந்து 21 தேய்பிறை அஷ்டமியன்று விரதம் இருந்தால் விருப்பம் நிறைவேறும்.

* காலபைரவருக்கு எட்டு கோயில்கள் காசியில் உள்ளதால் இத்தலத்தை பைரவ ேக்ஷத்திரம் என்பர்.

* குத்தாலம் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ேக்ஷத்திரபாலபுரத்தில் காலபைரவர் மூலவராக இருக்கிறார்.

* நாகபட்டினம் மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதரை தலைவராகக் கொண்டு அஷ்ட பைரவர் சன்னதி உள்ளது.

* திருச்சி - உறையூர் சாலையில் உள்ள ஜெயகாளிகாம்பாள் கோயிலில் அஷ்ட பைரவர்கள், தங்களுக்குரிய சக்திகளான பைரவிகள், வாகனங்களுடன் காட்சியளிக்கின்றனர்.

* கோயம்புத்துார் நஞ்சுண்டாபுரத்தில் எட்டடி உயர கால பைரவர் இருக்கிறார்.

* காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமாகறல் என்னும் ஊரில் அர்த்தநாரி கோலத்தில் பைரவர் உள்ளார்.

* கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள ஆறகளுர் பெரியநாயகி - காமநாதீசுவரர் கோயிலில் அஷ்ட பைரவர் சன்னதி உள்ளது.

* திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகிலுள்ள காரைக்காடு கிராமத்தில் உள்ள பைரவசாய் பீடத்தில் நவபைரவர் என ஒன்பது பைரவர்கள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us