
கே.பரமசிவன், கரோல்பார்க், டில்லி: *புகழுடன் வாழ...
உழைப்பு, நேர்மை, தர்மம் போதுமே.
எஸ். வினித் ஹலசூரு, பெங்களூரு: *எட்டெழுத்து மந்திரம் என்றால்...
'ஓம் நமோ நாராயணாய'. இந்த ரகசிய மந்திரத்தை முதலில் சொன்னவர் ராமானுஜர்.
கே.ராதா, நயினார்குறிச்சி, கன்னியாகுமரி: *சங்கநிதி, பதுமநிதி யாருடையது?
குபேரனிடம் உள்ளது ஒன்பது நிதி. அதில் முதலிடம் சங்கநிதி, பதுமநிதி.
ம.ஆதித்யா, கோடம்பாக்கம், சென்னை: *பிறர் சாப்பிடுவதைப் பார்த்தால்...
ஏக்கம், பொறாமையுடன் சாப்பிடுவதைப் பார்த்தால் தோஷம் வரும்.
ப.விஜயா, நிலக்கோட்டை, திண்டுக்கல்: *கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். பரிகாரம் உண்டா...
செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு பால் அபிேஷகம் செய்யுங்கள்.
ஜி.கிருஷ்ணன், சங்கரன்கோவில், தென்காசி: *அறுமுகச் சிவன் என்றால் யார்?
சிவபெருமானிடம் இருந்து தோன்றியதால் முருகனுக்கு இப்பெயர் வந்தது.
வி.பவித்ரன், அலகுமலை,திருப்பூர்: *விளக்கு பூஜையில் ஆண்கள் பங்கு பெறலாமா...
வழிபாடு பொதுவானது. நீங்களும் பங்கு பெறலாம்.
சி.முகுந்தன், மேலுார், மதுரை: *பெண்கள் மஞ்சள் பூசுவது ஏன்?
மங்கலத்தின் அடையாளம் மஞ்சள். இது கிருமி நாசினியும் கூட.
சி.முருகன், வில்லியனுார், புதுச்சேரி: *யாருக்கு இடையே செல்வது கூடாது?
1. கணவன், மனைவி
2. குரு, சீடன்
3. பசு, கன்றுக்கு இடையே செல்வது கூடாது.