
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஏகாதசி விரதம் இருந்தால் பக்தி வளரும்.
* உணவு கிடைக்கிறதே என அதிகமாகவோ, உணவு இல்லையே என பட்டினியாகவோ வாழ முடியாது.
* சிவாயநம என்று சிந்தித்தால் அபாயம் இல்லை.
* பாவம் செய்து விட்டு பணம் சேரவில்லையே என நொந்து கொள்வதால் பயனில்லை.
* திருநீறு இல்லாத நெற்றி பாழ்.
* ஆறு இருந்தால் அந்த ஊர் அழகாக இருக்கும்.
* அனைத்தும் சிவபெருமானின் செயல் என்பதை உணர்ந்திடு.
* தலையில் கைவைக்கக் கூடாது.
* தேங்காயை உடைப்பதற்கு முன் குடுமியை எடுக்கக் கூடாது.
* பூ, துளசி, வில்வம், தர்ப்பை புல்லை நகத்தால் கிள்ளக்கூடாது.
* தினமும் நாள், நட்சத்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
* பூஜை அறையில் அரிசி மாவால் கோலமிடுங்கள்.
* வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுங்கள். தேவையுள்ளவர்களுக்கு உதவுங்கள்.