
ஜன.10 மார்கழி 26: வைகுண்ட ஏகாதசி. பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு. ராப்பத்து உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீரங்கம் நம்பெருமான் முத்தங்கி சேவை. திருநெல்வேலி நெல்லையப்பர், சங்கரநயினார் கோயில், சிதம்பரம் சிவபெருமான் பவனி.
ஜன.11 மார்கழி 27: கூடாரை வெல்லும் உற்ஸவம். பிரதோஷம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சுந்தரராஜர் திருக்கோலம். குடந்தை சாரங்கபாணி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தலங்களில் திருவாய்மொழி உற்ஸவம்.
ஜன.12 மார்கழி 28: ஆருத்ரா அபிஷேகம். சிதம்பரம் நடராஜர், சிவகாமி தேர். திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் பஞ்சப் பிரகார உற்ஸவம். சடைய நாயனார் குருபூஜை. விவேகானந்தர் பிறந்த நாள்.
ஜன.13 மார்கழி 29: போகி. ஆருத்ரா தரிசனம். பவுர்ணமி. திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் மாணிக்கவாசகருக்கு உபதேசிக்கும் காட்சி. உத்திரகோசமங்கை மரகத நடராஜருக்கு அபிஷேகம். சிதம்பர ரகசிய பூஜை.
ஜன.14 தை 1: பொங்கல். உத்திராயண புண்ணிய காலம் ஆரம்பம். சபரிமலையில் மகரஜோதி தரிசனம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கல்யானைக்கு கரும்பு கொடுத்தருளிய காட்சி. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் நின்ற திருக்கோலம். ஸ்ரீரங்கம் நம்பெருமான் திருப்பாவை சாற்றுமுறை. கரிநாள்.
ஜன.15 தை 2: மாட்டுப்பொங்கல். திருவள்ளுவர் தினம். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, ஸ்ரீவில்லிபுத்துார் பெரியபெருமாள் பாரிவேட்டைக்கு எழுந்தருளல். திருவண்ணாமலை சிவபெருமான் திருவூடல் உற்ஸவம். கரிநாள்.
ஜன.16 தை 3: உழவர் திருநாள். திருக்குற்றாலம் குற்றாலநாதர் தெப்பம். மதுரை கூடலழகர் கணு உற்ஸவம். கரிநாள்.