sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜன 09, 2025 02:54 PM

Google News

ADDED : ஜன 09, 2025 02:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.வனஜா, திரிலோக்புரம், டில்லி: பொங்கல் கொண்டாட்டம் ஏன்?

உணவு கொடுத்த கடவுளுக்கு 'சர்க்கரை பொங்கல்' வைத்து நன்றி செலுத்துகிறோம்.

ஆர்.பிரபாகர், மாகடி, பெங்களூரு: ரத சப்தமி என்றால்...

தெற்கு நோக்கி (தட்சிணாயணம்) செல்லும் சூரியன், வடக்கு நோக்கி (உத்ராயணம்) செல்லும் நாள்.

எம்.சிந்து, ஆவடி, திருவள்ளூர்: தை பிறந்தால் வழி பிறக்கும் என்றால்...

நம்பிக்கை, விடாமுயற்சி உள்ளவருக்கு தை மாதத்தில் நல்ல வழி பிறக்கும் என பொருள்.

ஆர்.கமலி, சின்னமனுார், தேனி: புதுப்பானையில் தான் பொங்கல் வைக்கணுமா?

ஆம். புதுப்பானையில் பொங்கல் வைத்தால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும்.

வி.வசந்த், அலகுமலை, திருப்பூர்: சூரிய வட்டம் என்றால்...

சூரியனைச் சுற்றியுள்ள ஒளியின் பெயர் சூரிய வட்டம்.

எல்.நிவேதா, தச்சநல்லுார், திருநெல்வேலி: சூரியனுக்குரிய மாதம்...

ஆவணி. இந்த மாதத்தில் மட்டும் ஆட்சி பலத்துடன் சூரியன் இருப்பார்.

ஆர்.ரவீந்திரன், அகத்தீஸ்வரம், கன்னியாகுமரி: சூரியனை எப்போது வழிபட்டால் நல்லது?

தமிழ் மாதத்தில் முதல் ஞாயிறு அன்று வழிபட்டால் ஆளுமைத்திறன் அதிகரிக்கும்.

எம்.அகல்யா, சிவகாசி, விருதுநகர்: தை மாதத்தை 'தைமகள்' என்கிறார்களே...

நாடு, மொழி, நதி, காலம் போன்றவற்றை தாயாக போற்றுவது ஹிந்து மதம்.

வி.மனோஜ், வில்லியனுார், புதுச்சேரி: ஆதிரை என்றால்...

திருவாதிரை நட்சத்திரத்தை ஆதிரை என்பர்.






      Dinamalar
      Follow us