
ஜன.3 மார்கழி 19: சதுர்த்தி விரதம். ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் விழா தொடக்கம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பகல்பத்து உற்ஸவம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
ஜன.4 மார்கழி 20: சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம், சங்கரன்கோவில் உற்ஸவம் ஆரம்பம். திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் சூரிய பிரபையில் பவனி. காஞ்சிபுரம் வரதராஜர், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் திருமொழி திருநாள் தொடக்கம்.
ஜன.5 மார்கழி 21: பிள்ளையார் நோன்பு. சஷ்டி விரதம். அழகர்கோவில் கள்ளழகர், மன்னார்குடி ராஜகோபால சுவாமி தலங்களில் பகல்பத்து உற்ஸவம். அகோபிலமடம் 41வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
ஜன.6 மார்கழி 22: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம். மதுரை நவநீதக்கிருஷ்ணர், கரூர் ரங்கநாதர் புறப்பாடு.
ஜன.7 மார்கழி 23: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்ஸவம் ஆரம்பம், குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பட்டாபிராமர் திருக்கோலம். வாயிலார் நாயனார் குருபூஜை.
ஜன.8 மார்கழி 24: சிதம்பரம் சிவன் ரிஷப வாகனம். திருநெல்வேலி நெல்லையப்பர், கரூர் ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பகல்பத்து உற்ஸவம்.
ஜன.9 மார்கழி 25: கார்த்திகை விரதம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் அர்ச்சுன மண்டபம் எழுந்தருளல். திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம்.