
ஒரு மாதத்திற்கு இரண்டு பட்சம். அதாவது பட்சம் என்பது பதினைந்து நாள். அதில் தேய்பிறையை கிருஷ்ண பட்சம் என்றும், வளர்பிறையை சுக்லபட்சம் என்றும் சொல்வர். இந்த இரு பட்சங்களிலும் வரும் 11வது திதி ஏகாதசி.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி. அறிந்தும் அறியாமலும் செய்யும் தீவினைகள் ஏகாதசி விரதம் இருந்தால் மறையும். துளசி தீர்த்தம் மட்டும் குடித்து, பகலும், இரவுமாக நாள் முழுவதும் கண் விழித்து, நாராயண நாமம் சொல்லி, மறுநாள் காலையில் துவாதசியன்று சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். காயத்ரியை காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. ஏகாதசியை காட்டிலும் சிறந்த விரதம் இல்லை என்பார்கள்.
வைகுண்ட ஏகாதசியைத் தவிர மற்ற மாதத்தில் வரும் ஏகாதசியின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மாதம் - ஏகாதசி - பலன்
சித்திரை - காமதா (வளர்பிறை) - நினைத்தது நடக்கும்.
சித்திரை - பாபமோசனிகா (தேய்பிறை) - விரும்பியது கிடைக்கும்.
வைகாசி - மோகினி (வளர்பிறை) - புனித நதிகளில் நீராடிய பலன்.
வைகாசி - வரூதினி (தேய்பிறை) - பத்ரிநாத் தரிசன பலன்.
ஆனி - நிர்ஜலா (வளர்பிறை) - சொர்க்கம் கிடைக்கும்.
ஆனி - அபார (தேய்பிறை) - மனச்சுமை தீரும்.
ஆடி - சாயினி (வளர்பிறை) - பாற்கடலை தரிசித்த பலன்.
ஆடி - யோகினி (தேய்பிறை) - லட்சம் பேருக்கு அன்னமிட்ட பலன்.
ஆவணி - புத்ரஜா (வளர்பிறை) - அழகான குழந்தை பிறக்கும்.
ஆவணி - சாமிகா (தேய்பிறை) - குழந்தையின்மை நீங்கும்.
புரட்டாசி - பத்மநாபா (வளர்பிறை) - குடும்ப ஒற்றுமை.
புரட்டாசி - அஜா (தேய்பிறை) - பிரிந்த தம்பதி சேர்வர்
ஐப்பசி - பராங்குசா (வளர்பிறை) - வறுமை, நோய் நீங்கும்.
ஐப்பசி - இந்திரா (தேய்பிறை) - மன நிம்மதி கிடைக்கும்.
கார்த்திகை - பிரபோதின (வளர்பிறை) - 21 பேருக்கு தானம் செய்த பலன்.
கார்த்திகை - ரமா (தேய்பிறை) - தீர்க்க சுமங்கலி பாக்கியம்.
மார்கழி - வைகுண்ட (மோட்ச) (வளர்பிறை) - சொர்க்கம் கிடைக்கும்.
மார்கழி - உத்பத்தி (தேய்பிறை) - திருமணத்தடை விலகும்.
தை - புத்ரதா (வளர்பிறை) - ஆண் குழந்தை பிறக்கும்.
தை - சுபலா (தேய்பிறை) - ஒளிமயமான வாழ்வு.
மாசி - ஜயா (வளர்பிறை) - முன்னோருக்கு முக்தி.
மாசி - ஷட்திலா (தேய்பிறை) - முன்னோர் சாபம் நீங்கும்.
பங்குனி - ஆமலகி (வளர்பிறை) - ஆயிரம் பசுக்கள் தானம் செய்த பலன்.
பங்குனி - விஜயா (தேய்பிறை) - நடக்காத செயலும் நடக்கும்.
அதிகப்படியாக வரும் 25வது ஏகாதசிக்கு 'கமலா' என்று பெயர்.