
பிறந்த நட்சத்திரத்தன்று வழிபாடு செய்தால் தடைகள் விலகும். பணம், புகழ், ஆரோக்கியம், நற்பண்புகள் வளரும். எதிரி தொல்லை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எனவே இந்நாளில் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய தெய்வத்தை வழிபட்டால் சகல நன்மையும் கிடைக்கும்.
1. அசுவினி - சரஸ்வதி
2. பரணி - துர்கை
3. கார்த்திகை - அக்னி, முருகன்
4. ரோகிணி - பிரம்மா, கிருஷ்ணர்
5. மிருகசீரிடம் - சந்திரன், சிவன்
6. திருவாதிரை - நடராஜர்
7. புனர்பூசம் - அதிதி, ராமர்
8. பூசம் - பிரகஸ்பதி, தட்சிணாமூர்த்தி
9. ஆயில்யம் - ஆதிசேஷன், லட்சுமணன், நாகராஜர்
10. மகம் - சுக்கிரன், சூரியன்
11. பூரம் - பார்வதி, ஆண்டாள்
12. உத்திரம் - சூரியன், சாஸ்தா, மகாலட்சுமி
13. அஸ்தம் - காயத்ரி
14. சித்திரை - விஸ்வகர்மா, சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - வாயு, நரசிம்மர்
16. விசாகம் - முருகன்
17. அனுஷம் - லட்சுமி நாராயணர்
18. கேட்டை - இந்திரன்
19. மூலம் - அனுமன்
20. பூராடம் - ஜம்புகேஸ்வரர்
21. உத்திராடம் - விநாயகர்
22. திருவோணம் - ஹயக்ரீவர், வாமனர்
23. அவிட்டம் - அஷ்ட வசுக்கள், அனந்த சயனப்பெருமாள்
24. சதயம் - எமன், மிருத்யுஞ்ஜேஸ்வரர்
25. பூரட்டாதி - குபேரன், ஏகபாதர்
26. உத்திரட்டாதி - காமதேனு, மகாஈஸ்வரர்
27. ரேவதி - சனிபகவான், ரங்கநாதர்