
அக்.17 புரட்டாசி 31: ஏகாதசி விரதம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். பாபநாசம் சிவபெருமான் புறப்பாடு. மதுரை கூடலழகர் பவனி. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
அக்.18 ஐப்பசி 1: விஷு புண்ணிய காலம். சனிப்பிரதோஷம். குற்றாலம், பாபநாசம் சிவன் விஷு உற்ஸவ தீர்த்தவாரி. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உற்ஸவம் ஆரம்பம். மயிலாடுதுறை உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில்சந்திரசேகரர் புறப்பாடு.
அக்.19 ஐப்பசி 2: முகூர்த்த நாள். நரக சதுர்த்தசி. மாதசிவராத்திரி. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம். திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.
அக்.20 ஐப்பசி 3: முகூர்த்த நாள். தீபாவளி. திருநெல்வேலி வள்ளியூர் முருகன் உற்ஸவம் ஆரம்பம். மதுரை மீனாட்சி அம்மன் வைரகிரீடம், திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள், திருவள்ளூர் வீரராகவர், மதுரை கூடலழகர் திருமஞ்சனம்.
அக்.21 ஐப்பசி 4: அமாவாசை விரதம். கேதார கவுரி விரதம். திருவனந்தபுரம், திருவட்டாறு சிவன் புறப்பாடு. திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷணயாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
அக்.22 ஐப்பசி 5: கோவர்த்தன விரதம். சகல முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா ஆரம்பம். குமாரவயலுார் முருகன் வள்ளி, தெய்வானையுடன் பச்சை மயில் வாகனம். சிக்கல் சிங்காரவேலவர் உற்ஸவம் ஆரம்பம். மெய்கண்டார் குருபூஜை.
அக்.23 ஐப்பசி 6: எமத்துவிதியை. சந்திர தரிசனம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் பவனி. கரிநாள்.