sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 16, 2025 01:42 PM

Google News

ADDED : அக் 16, 2025 01:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.ராம்குமார், அனுப்பானடி, மதுரை: சந்திராஷ்டம நாளில் ...

மவுனமாக இருங்கள். விநாயகரை வழிபடுங்கள்.

ஜி.வி.ரமேஷ்குமார், களியக்காவிளை, கன்னியாகுமரி: ஜாதகத்தில் மாந்தி என குறிப்பிடுகிறார்களே...

சனீஸ்வரரின் மகன் மாந்தி. நவக்கிரகத்துடன் சேர்த்து இவரையும் சிலர் குறிக்கிறார்கள்.

கே.எஸ்.விஜயகுமார், மயிலாப்பூர், சென்னை: வாசலில் பாம்புத் தோல் கிடந்தால் தோஷமா...

தோஷமில்லை.

எஸ்.ரவிக்குமார், சிதம்பரம், கடலுார்: விஸ்வரூபம் என்றால்...

வானுக்கும், பூமிக்குமாக வளர்ந்து தன் உருவத்தை கடவுள் பெரிதாக காட்டுவது.

எஸ்.சரவணக்குமார், பழநி, திண்டுக்கல்: புனித நதிகளில் நீராடாமல் தலையில் தீர்த்தம் தெளிக்கலாமா...

உடல்நலம் இல்லாத நிலையில் தலையில் தெளிக்கலாம். மற்றவர்கள் நீராடுவது அவசியம்.

எஸ்.முத்துக்குமார், ஆழ்வார்குறிச்சி, தென்காசி: வலமிருந்து இடமாகச் சன்னதியை சுற்றலாமா...

சுற்றக் கூடாது. இடமிருந்து வலமாகச் சுற்றுவதே சரியானது.

எம்.எஸ்.அருண் குமார், பல்லடம், திருப்பூர்: பிரம்ம முகூர்த்தத்தின் (அதிகாலை 4:30 - 6:00 மணி) சிறப்பைச் சொல்லுங்கள்.

இந்த நேரத்தில் மனம், உடல் புத்துணர்வுடன் இருக்கும். யோகாசனம், தியானம், ஜபம் செய்ய ஏற்ற நேரம்.

எஸ்.சுரேஷ்குமார், கல்யாண்புரி, டில்லி: ஜபம், உபாசனை என்றால்...

ஜபம் - தினமும் மூன்று வேளை 108 முறை மந்திரம் சொல்வது

உபாசனை - வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்வது

ஜே.சசிக்குமார், வில்லாபுரம், மதுரை: சிலர் சொல்வது அப்படியே நடக்கிறதே...

பக்தி, ஒழுக்கம், உண்மை, உதவும் குணம் இருப்பவர்கள் சொன்னால் அப்படியே பலிக்கும்.






      Dinamalar
      Follow us