தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/வீடெங்கும் தீபம்

வீடெங்கும் தீபம்

வீடெங்கும் தீபம்


ADDED : அக் 17, 2025 08:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 08:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

' தினமும் விளக்கேற்று ' என்று பெரியவர்கள் சொல்கிறார்களே! ஒரு சுவிட்சை போட்டால் வண்ண விளக்குகள் சுவாமி படங்களை சுற்றி எரிகிறதே என சிலர் நினைப்பதுண்டு.

அப்படிப்பட்டவர்கள் விளக்கின் தத்துவத்தை அறிவது அவசியம்.

* விளக்கேற்ற 'திரி' என்னும் கயிறு வேண்டும். கயிறை ' பாசம்' என்பர். பாசம் என்னும் கயிற்றால் மனிதன் கட்டப்பட்டிருக்கிறான். குடும்பம், குழந்தை, பணம் என நமக்கு பலவற்றின் மீது பாசம் (ஈடுபாடு) இருக்கிறது.

* விளக்கெரிய எண்ணெய் தேவை. எண்ணெய்யை சமஸ்கிருதத்தில் 'ஸ்நேகம்' என்பர். 'ஸ்நேகம்' என்றால் நட்பு, அல்லது உறவு. எண்ணெய்யை விளக்கில் ஊற்றும் போது பிசுக்கு ஒட்டும். இதுவே வாழ்வின் மீதுள்ள பற்றைக் குறிக்கும்.

* விளக்கில் 'ஜோதி' என்னும் நெருப்பு ஏற்றப்படும். இது திரி, எண்ணெய்யை கரைத்து விடும். கடைசியில் அதுவும் அணையும். அதாவது பந்த பாசம், பற்றை அறுத்தால், ஞானம் என்னும் ஜோதியில் (கடவுள்) ஐக்கியம் ஆகலாம் என்பதே தத்துவம்.

அடேங்கப்பா! இவ்வளவு விஷயம் இருக்கும் போது தீபம் ஏற்றாமல் இருக்கலாமா என்ன! அதிலும் தீபாவளி என்பதற்கு 'தீபங்களின் வரிசை' என பொருள். அதனால் இந்நாளில் வீடு நிறைய தீபங்களை ஏற்றுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us