தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சிவனை மறவேன்

சிவனை மறவேன்

சிவனை மறவேன்


ADDED : மார் 12, 2026 08:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 08:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தேவாரம் பாடிய மூவர் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.

* தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு சிவத்தலம் கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம்.

* மன்னர் அநபாயச் சோழனிடம் அமைச்சராக இருந்தவர் சேக்கிழார்.

* சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர் என்றும் பெயருண்டு.

* ஆமை சிவபூஜை செய்த தலம் திருமணஞ்சேரி.

* பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்திலுள்ள ஒரே தலம் ராமேஸ்வரம்.

* சிவனின் திருக்கோலங்களில் கருணாமூர்த்தியாக திகழ்வது சோமாஸ்கந்தர்.

* பஞ்சாட்சர மந்திரத்தை தமிழில் 'திருவைந்தெழுத்து' என்று சொல்வர்.

* சிவனடியாருக்கு அன்னமும், பொருளும் தானம் அளித்தவர் சிறப்புலி நாயனார்.

* சிவனுக்கு மலர்த்தொண்டு புரிந்தவர் முருக நாயனார்.

* ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டவர் திருஞானசம்பந்தர்.

* நெஞ்சுவிடு துாது என்னும் சைவ சாஸ்திர நுாலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us