தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மார் 12, 2026 08:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 08:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச் 13 மாசி 29: சீதாதேவி விரதம். சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. காரி நாயனார் குருபூஜை.

மார்ச் 14 மாசி 30: காரடையான் நோன்பு. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர் திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பாலபிஷேகம்.

மார்ச் 15 பங்குனி 1: முகூர்த்த நாள். ஷடசீதி புண்ணிய காலம். ஏகாதசி, திருவோண விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். சாத்துார் வெங்கடேசர் தோளுக்கினியானில் புறப்பாடு.

மார்ச் 16 பங்குனி 2: முகூர்த்த நாள். பிரதோஷம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம். தென்னை, மா, பலா, புளி வைக்க நல்லநாள்.

மார்ச் 17 பங்குனி 3: மாதசிவராத்திரி. தொட்டியம் காளியம்மன் பவனி. சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி முருகன் பால் அபிேஷகம். தண்டியடிகள் நாயனார் குருபூஜை.

மார்ச் 18 பங்குனி 4: அமாவாசை. மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளிசேஷ வாகனம் பரமபதநாதர் திருக்கோலம். திருப்புவனம் கோதண்ட ராமர், கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷணயாழ்வாருக்கு நடையழகு சேவை.

மார்ச் 19 பங்குனி 5: தெலுங்கு வருடப்பிறப்பு, யுகாதி. திருப்பதி பெருமாள் மைசூரு மண்டபம் எழுந்தருளல். சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us