தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/நிம்மதிக்கு...

நிம்மதிக்கு...

நிம்மதிக்கு...


ADDED : மார் 12, 2026 12:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 12:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடும்பத்தில் நிம்மதி ஏற்பட திருநாவுக்கரசு சுவாமிகளின் போற்றித்திருத்தாண்டகம் படியுங்கள்.

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி

கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி

அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி

மற்று ஒருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி

வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி

செற்றவர் தம் புரம் எரித்த சிவனே

போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி.

வங்கம்மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி

மதயானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி

கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி

கொல் புலித்தோல் ஆடைக்குழகா போற்றி

அங்கணனே அமரர்கள் தம் இறைவா போற்றி

ஆலமர நீழல் அறம் சொன்னாய் போற்றி

செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி.

மலையான் மடந்தை மணாளா போற்றி

மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி

நிலையாக என் நெஞ்சில் நின்றாய் போற்றி

நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி

இலை ஆர்ந்த மூவிலைவேல் ஏந்தி போற்றி

ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி

சிலையால் அன்று எயில் எரித்த சிவனே போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி

பூதப்படை உடையாய் போற்றி போற்றி

மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி

மறியேந்து கையானே போற்றி போற்றி

உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி

உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி

சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி.

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி

நற்றவனே நின் பாதம் போற்றி போற்றி

வெஞ்சுடரோன் பல்இறுத்த வேந்தே போற்றி

வெண்மதி அம் கண்ணி விகிர்தா போற்றி

துஞ்சிருள் ஆடல் உகந்தாய் போற்றி

துாநீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி

செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி.

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி

சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி

பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி

புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி

அங்கமலத்து அயனோடு மாலும் காணா

அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி

செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி.

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி

வான் பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி

கொம்பனைய நுண் இடையாள் கூறா போற்றி

குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி

நம்புமவர்க்கு அரும்பொருளே போற்றி போற்றி

நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி

செம்பொனே மரகதமே மணியே போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி.

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி

உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி

வள்ளலே போற்றி மணாளா போற்றி

வானவர் கோன் தோள் துணித்த மைந்தா போற்றி

வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி

மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி

தெள்ளு நீர்க்கங்கைச் சடையாய் போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி.

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி

புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி

தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி

திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி

சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி

சங்கொத்த நீற்று எம் சதுரா போற்றி

சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி.

பிரமன்தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி

பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி

கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி

காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி

அருமந்த தேவர்க்கு அரசே போற்றி

அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும்

சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி

திருமூலட்டானனே போற்றி போற்றி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us