தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மார் 19, 2026 01:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 01:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச் 20 பங்குனி 6: சந்திர தரிசனம். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு. திருப்புவனம் கோதண்ட ராமசுவாமி பவனி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. பெரிய பெருமாள் திருநட்சத்திரம். கரிநாள்.

மார்ச் 21 பங்குனி 7: சவுபாக்கிய கவுரி விரதம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம். மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம். தொட்டியம் காளியம்மன் பவனி. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.

மார்ச் 22 பங்குனி 8: சதுர்த்தி, சக்தி கணபதி விரதம். திருநெல்வேலி நெல்லையப்பர் உற்ஸவம் ஆரம்பம். தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. மிலட்டூர் விநாயகர் புறப்பாடு. திருப்போரூர் முருகன் பால் அபிஷேகம்.

மார்ச் 23 பங்குனி 9: கார்த்திகை விரதம். வசந்த பஞ்சமி. திருச்சி, கழுகுமலை, திருச்சுழி, திருப்பரங்குன்றம், காஞ்சிபுரம், சென்னை தலங்களில் சிவபெருமான் உற்ஸவம் ஆரம்பம். ரத்தினகிரி முருகன் தங்கரதம். பழநி, திருச்செந்துார் தலங்களில் முருகன் புறப்பாடு.

மார்ச் 24 பங்குனி 10: சஷ்டி விரதம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி தேர். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சூரிய, சந்திர பிரபையில் பவனி. சென்னை மல்லீஸ்வரர் புறப்பாடு. திருச்சி தாயுமானவர் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி. திருப்பரங்குன்றம் முருகன் தங்க குதிரை வாகனம். திருப்புல்லாணி ஜெகந்நாதர், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். நேசநாயனார் குருபூஜை.

மார்ச் 25 பங்குனி 11: முகூர்த்த நாள். சந்தான சப்தமி. பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனம். திருநெல்வேலி நெல்லையப்பர் வேணுவன லிங்கோற்பவத்தில் பவனி. ராமகிரி கல்யாண நரசிங்கப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்.

மார்ச் 26 பங்குனி 12: அசோகாஷ்டமி. பழநி முருகன் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் பவனி. கணநாத நாயனார் குருபூஜை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us