தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/உலக அமைதிக்கு...

உலக அமைதிக்கு...

உலக அமைதிக்கு...


ADDED : ஜூன் 18, 2026 09:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 09:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமும் விளக்கேற்றி கோளறு பதிகம் பாடுங்கள்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே

ஆசுஅறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழை உடனே

பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும், உடனாய நாள்கள் அவை தாம்

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

திருமகள் கலை அது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வம் ஆன பலவும்,

அருநெறி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

மதி நுதல் மங்கையோடு, வட ஆல் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்,

நதியொடு கொன்றை மாலை முடிமேல்அணிந்து, என் உளமே புகுந்த அதனால்

கொதி உறு காலன், அங்கி, நமனோடு துாதர் கொடுநோய்கள் ஆன பலவும்,

அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

நஞ்சு அணிகண்டன், எந்தை, மடவாள் தனோடும் விடை ஏறும், நங்கள் பரமன்,

துஞ்சு இருள், வன்னி, கொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும் மிகையான பூதம் அவையும்,

அஞ்சிடும், நல்ல நல்ல; அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வாள் வரி அதள் அது ஆடைவரி கோவணத்தார் மடவாள் தனோடும் உடன்ஆய்,

நாள் மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்,

கோள் அரி, உழுவையோடு, கொலையானை கேழல், கொடு நாகமோடு, கரடி,

ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

செப்பு இளமுலை நல்மங்கை ஒரு பாகமாக விடைஏறு செல்வன் அடைவார்

ஒப்பு இள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

வெப்பொடு, குளிரும் வாதம், மிகையான பித்தும், வினையாக வந்து நலியா,

அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

வேள்பட விழி செய்து அன்று, விடை மேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்,

வாள்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடர் ஆன வந்து நலியா;

ஆழ்கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பலபல வேடம் ஆகும்பரன், நாரி பாகன், பசு ஏறும் எங்கள் பரமன்,

சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்,

மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலம் ஆன பலவும்

அலைகடல், மேரு நல்ல; அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன்,

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்,

புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

தேன் அமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல் துன்னி, வளர் செம்பொன் எங்கும் நிகழ,

நான்முகன் ஆதி ஆய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்,

தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us