தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூன் 18, 2026 09:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 09:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 19 ஆனி 5: ஸ்ரீவில்லிபுத்துார் பட்டர்பிரான் ஆளும் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

ஜூன் 20 ஆனி 6: சஷ்டி விரதம். ஆரண்ய கவுரி விரதம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் காட்சி. மாணிக்கவாசகர் குருபூஜை. கரிநாள்.

ஜூன் 21 ஆனி 7: ஆனி உத்திர அபிஷேகம். திருப்பரங்குன்றம் முருகன் ஊஞ்சல் காட்சி. சிதம்பரம் சிவபெருமான் தேர். சாத்துார் வெங்கடேசப்பெருமாள் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். அமர்நீதி நாயனார் குருபூஜை.

ஜூன் 22 ஆனி 8: ஆனி உத்திர தரிசனம். நடராஜர் அபிஷேகம். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி நடேசர் அன்னாபிஷேகம். திருக்கோளக்குடி ககோளபுரீஸ்வரர் கேடய சப்பரத்தில் பவனி. கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம்.

ஜூன் 23 ஆனி 9: திருக்கோளக்குடி ககோளபுரீஸ்வரர், கண்டதேவி சிவபெருமான் திருக்கல்யாணம். சுவாமிமலை முருகன் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கபூமாலை சூடியருளல்.

ஜூன் 24 ஆனி 10: முகூர்த்த நாள். பாபஹர தசமி. ஸ்ரீவில்லிபுத்துார் பட்டர்பிரான் தேர். மதுராந்தகம் கோதண்டராமர் உற்ஸவம் ஆரம்பம். திருவள்ளூர் வீரராகவப் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்.

ஜூன் 25 ஆனி 11: முகூர்த்த நாள். ஏகாதசி விரதம். திருத்தங்கல் நின்றநாராயணப்பெருமாள் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். வீரவநல்லுார் பூமிநாதசுவாமி தெப்பம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனம். அழகிய சிங்கர், பெரியாழ்வார் திருநட்சத்திரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us