ADDED : ஜூன் 25, 2026 11:05 AM

அ நிறம் | அளவு
* புதனுக்குரிய அதிதேவதை குபேரர். புதனுக்குரிய பச்சை நிறம் குபேரருக்கு விருப்பமானது. பச்சை வஸ்திரம், பாசிப்பயறு, நாயுருவி இலை, வெண்கடுகு போன்றவற்றை குபேர ஹோமத்தின் போது இடுவர். குபேரரை வணங்கினால் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
* சம்பா அரிசியில் செய்த அவல் நைவேத்யம் குபேரருக்கு விருப்பமானது. மென்மையான இழையால் ஆன அவலை இவர் விரும்பி ஏற்கிறார்.
* இவரது மடியில் கீரி இருக்கும். இது விஷ ஜந்துகளான பாம்பு, தேளை விரட்டும் தன்மை கொண்டது. விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவது போல, எதிரி பயத்தை போக்கும் விதத்தில் கீரியைத் தாங்கியிருக்கிறார்.
* குபேரருக்குரிய திசை வடக்கு. தொழில், வியாபார இடங்களிலும், வீட்டிலும் பணப்பெட்டியை வடக்கு நோக்கி வைத்தால் லாபம் பெருகும்.
