தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 02, 2026 10:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 10:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாவித்ரி.எம், திருநின்றவூர், திருவள்ளூர்: வேலை கிடைக்க...

முதலில் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். அத்துடன் முருகப்பெருமானுக்கு செவ்வாயன்று அரளிப்பூ மாலை சாத்துங்கள்.

சரோஜா.வி, பசவன்குடி, பெங்களூரு: எந்த எண்ணெய்யில் தீபமேற்றலாம்...

நெய்யில் ஏற்றுவது சிறப்பு. இல்லாவிட்டால் நல்லெண்ணெய்யில் ஏற்றுங்கள்.

சச்சு.ஆர், திருநாவலுார், கள்ளக்குறிச்சி: எனக்கு நேர்ந்த பழியை போக்குவது எப்படி?

இந்தப்பழி ஏற்பட்டதற்கான காரணம் உங்களுக்கு தெரியும். இனி அதுபோல் செய்யாதீர்கள். நல்லவனாக மாறுங்கள்.

லட்சுமி.எஸ், நங்கநல்லுார், சென்னை: சுவாமி சன்னதியின் முன் நேராக அமர்ந்து ஜபம் செய்யலாமா...

கூடாது. சன்னதிக்கு பக்கவாட்டில் அல்லது பிரகாரத்தில் ஜபம் செய்யுங்கள்.

நிர்மலா.வே, கல்லல், சிவகங்கை: பவுர்ணமி அன்று எந்த தெய்வத்தை வழிபடலாம்?

எல்லா தெய்வத்தையும் வழிபடலாம். இரவில் வழிபடுவது இன்னும் நல்லது.

பத்மா.ரெ, குளச்சல், கன்னியாகுமரி: பிரதோஷ விரதத்தை தவிர சிவனுக்கு வேறு விரதம் உண்டா?

உண்டு. பிரதோஷ விரதம் விசேஷமானது. திங்கள் அன்றும் விரதமிருக்கலாம்.

விஜயா.ஆர், கோவில்பட்டி, துாத்துக்குடி: நெல்லி மரம் வீட்டில் இருந்தால்...



மகாலட்சுமியின் அம்சம் 'ஸ்ரீ விருட்சம்' (நெல்லி மரம்). இது வீட்டில் இருந்தால் செல்வம் சேரும்.

சுதா.ஜெ, பல்லடம், திருப்பூர்: காசிக்கு செல்பவர்கள் ராமேஸ்வரம் செல்வது கட்டாயமா...

காசியில் இருந்து புறப்பட்டால் ராமேஸ்வரமும், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டால் காசிக்கும் செல்ல வேண்டும்.

தேவிகா.டி, உத்தமபாளையம், தேனி: உடைந்த சிலைகளை வைத்து பூஜை செய்யலாமா?

செய்யக்கூடாது. ஆபரணமோ, அலங்காரமோ உடைந்தால் தோஷம் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us