ADDED : ஜூன் 11, 2026 11:03 AM

ஜூன் 12 வைகாசி 29: பிரதோஷம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தாமிபரணி ஆற்றில் திருமஞ்சனம். அகோபிலமடம் 39 வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். கழற்சிங்க நாயனார் குருபூஜை.
ஜூன் 13 வைகாசி 30: கார்த்திகை விரதம். மாத சிவராத்திரி. சிதம்பரம், ஆவுடையார்கோவிலில் உற்ஸவம் ஆரம்பம். அழகர்கோவில் கள்ளழகர், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள், ராமகிரிப்பேட்டை தலங்களில் திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம்.
ஜூன் 14 வைகாசி 31: அமாவாசை. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு. திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷணயாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம்.
ஜூன் 15 ஆனி 1: ஷடசீதி புண்ணியகாலம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் புறப்பாடு. கரிநாள்.
ஜூன் 16 ஆனி 2: சந்திர தரிசனம். புன்னாக கவுரி விரதம். ேஸாப பதம். ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் முத்துப்பந்தல் அருளிய லீலை.
ஜூன் 17 ஆனி 3: முகூர்த்த நாள். ரம்பா திரிதியை. மாதவி விரதம். கண்டனுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
ஜூன் 18 ஆனி 4: முகூர்த்த நாள். சதுர்த்தி, கதளீ கவுரி விரதம். தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. மிலட்டூர் விநாயகர் பவனி.
