தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கவலை தீர...

கவலை தீர...

கவலை தீர...


ADDED : ஜூன் 11, 2026 11:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 11:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கயிலை போற்றியை தினமும் பாடினால் கவலை தீரும்.

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி

மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

ஓவாத சத்தத்து ஒளியே போற்றி

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி

ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி

பிறவி அறுக்கும் பிரானே போற்றி

வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி

மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி

பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி

போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி

கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி

மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி

உருவாகி என்னை படைத்தாய் போற்றி

உள்ளாகி வாங்கி ஒளித்தாய் போற்றி

திருவாகி நின்ற திறமே போற்றி

தேசம் பரவப் படுவாய் போற்றி

கருவாகி யோடும் முகிலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி

வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி

ஊனத்தை நீக்கும் உடலே போற்றி

ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி

தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி

கான்தீயாடல் உகந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

ஊராகி நின்ற உலகே போற்றி

ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

பேராகி எங்கும் பரந்தாய் போற்றி

பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி

நீராவியான நிழலே போற்றி

நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி

காராகி நின்ற முகிலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

சில்லுறுவாய்ச் சென்று திரண்டாய் போற்றி

தேவர் அறியாத தேவே போற்றி

புல்லுயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி

போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி

பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி

பற்றி உலகை விடாதாய் போற்றி

கல்லுயிராய் நின்ற கனலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி

பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி

எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி

என் சிந்தை நீங்கா இறைவா போற்றி

விண்ணும் நிலனும் தீயானாய் போற்றி

மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி

கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

இமையாது உயிராது இருந்தாய் போற்றி

என் சிந்தை நீங்கா இறைவா போற்றி

உமையான மது அணைத்தாய் போற்றி

ஊழி ஏழான ஒருவா போற்றி

அமையா அருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி

ஆதி புராணனாய் நின்றாய் போற்றி

சுமையாகி நின்ற கனலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி

முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி

தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி

சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி

ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி

அல்லம் நலிய அலைந்தேன் போற்றி

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

நெடிய விசும்பொடு கண்ணே போற்றி

நீள அகலம் உடையாய் போற்றி

அடியும் முடியும் இகழிப் போற்றி

அங்கும் ஒன்று அறியாமை நின்றாய் போற்றி

கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி

கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி

கடிய உருமொடு மின்னே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி

ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி

எண்ணா இலங்கைக்கோன் தன்னை போற்றி

இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி

பண்ணார் இசையின் சொல் கேட்டாய் போற்றி

பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி

கண்ணாய் உலகிற்கு நின்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us