தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/தெரிந்து கொள்வோமா...

தெரிந்து கொள்வோமா...

தெரிந்து கொள்வோமா...


ADDED : நவ 26, 2026 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 08:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பைரவருக்கு பிடித்தமானது சந்தனக்காப்பு. இதில் புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்துாரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரத்தை சேர்ப்பர்.

* காலையில் பைரவரை வழிபட்டால் நோய் நீங்கும். மதியம் வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். மாலையில் வழிபட்டால் பாவம் தீரும். இரவில் வழிபட்டால் வாழ்வு வளம் பெறும்.

* பைரவருக்கு சிவப்புத் துணியில் 9 மிளகை ஒரு முடிச்சிட்டு நல்லெண்ணெய் விட்டு தீபமேற்ற பணபிரச்னை தீரும்.

* தாமரை, வில்வம், தும்பை, சந்தன மாலைகளை பைரவருக்கு அணிவிப்பது சிறப்பு. செவ்வரளி, மஞ்சள், செவ்வந்தி, வாசனை மலர்களால் அர்ச்சனை

செய்வது சிறப்பு. மல்லிகையைத் தவிர்க்க வேண்டும்.

* சர்க்கரைப் பொங்கல், தயிர்ச்சாதம், தேன், செவ்வாழை, அவல் பாயசம், உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால், பழவகைகள் வைத்து வழிபடுவது சிறப்பு.

* செல்வத்தின் அதிபதி சொர்ண ஆகர்ஷண பைரவர். இவருடைய இடது கையில் அட்சய பாத்திரம் இருக்கும்.

* காசியின் காவல் தெய்வமான பைரவருக்கு பூஜை செய்த பிறகே காசி விஸ்வநாதருக்கு பூஜை நடக்கும்.

* காசிக்கு செல்பவர்கள் கங்கையில் நீராடி விஸ்வநாதரை வழிபட்டு இறுதியாக காலபைரவரை தரிசித்தால் தான் யாத்திரை சென்ற பலன் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us