ADDED : நவ 26, 2026 10:29 AM

நவ.27 கார்த்திகை 11: சங்கடஹர சதுர்த்தி. திருவண்ணாமலை சுப்ரமணியர் தெப்பம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
நவ.28 கார்த்திகை 12: ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவர், மதுரை கூடலழகர் திருமஞ்சனம். பத்ராசலம் ராமர் புறப்பாடு.
நவ.29 கார்த்திகை 13: முகூர்த்த நாள். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம். திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் பாலாபிஷேகம்.
நவ.30 கார்த்திகை 14: சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம். நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
டிச.1 கார்த்திகை 15: பைரவாஷ்டமி. சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல். அகோபிலமடம் 31வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.
டிச.2 கார்த்திகை 16: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம். திருமயம் ஆண்டாள் புறப்பாடு. வைகுண்டபதி கள்ளபிரான் பால் அபிஷேகம். மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை.
டிச.3 கார்த்திகை 17: திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை. திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். கரிநாள்.
