
ஆக.2 ஆடி 17: மாதசிவராத்திரி. சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானம். திருவாடானை சிநேகவல்லியம்மன் கிளி வாகனம். படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு.
ஆக.3 ஆடி 18: ஆடிப்பெருக்கு. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டள் சன்னதியில் ஐந்து கருட சேவை. நாகப்பட்டினம் நீலாயதாட்க்ஷியம்மன் அன்ன வாகனம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
ஆக.4 ஆடி 19: ஆடி அமாவாசை விரதம். வத்திராயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருவிழா. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் காலையில் தங்கப்பல்லக்கு.
ஆக.5 ஆடி 20: மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்ஸவம் ஆரம்பம். நயினார்கோவில் சவுந்திரநாயகி சிவலிங்க பூஜை செய்தல். கரிநாள்.
ஆக.6 ஆடி 21: சந்திரதரிசனம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும் ரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் பவனி. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
ஆக.7 ஆடி 22: ஆடிப்பூரம். சுவர்ணகவுரி விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னார் பெருந்தேரில் பவனி. அஹோபிலமடம் 26வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். ஆண்டாள் திருநட்சத்திரம்.
ஆக.8 ஆடி 23: நாகசதுர்த்தி. சதுர்த்தி விரதம். துார்வாகணபதி விரதம். நயினார்கோவில் சவுந்திரநாயகி தபசுக்காட்சி. இன்று விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுதல்.