
பா.யாழினி, கமலாநகர், டில்லி.
*மகாலட்சுமிக்கு உரிய நேரம்...
@விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடும் நேரம் மாலை. அந்நேரத்தில் சாப்பிடுதல், துாங்குதல் கெட்ட செயல்களில் ஈடுபடுதல் கூடாது. இந்நேரத்தில் வழிபடுவதை தவிர மற்றவற்றில் ஈடுபடுவது பாவம்.
க.மகேஷ், திருமங்கலம், மதுரை.
*குழந்தைக்கு முதலில் தாய்வழி குலதெய்வத்திற்கு முடி எடுக்கலாமா...
தந்தைவழி குலதெய்வத்திற்கு பின்னரே தாய்வழி குலதெய்வத்திற்கு முடி எடுக்கலாம்.
த.தேவராஜ், பேரூர், கோயம்புத்துார்.
*கோயிலில் கண்டாமணி (பெரியமணி) ஒலிப்பது ஏன்?
கடவுளை சிந்திக்காமல் வேண்டாத விஷயங்களில் மூழ்கியவர்களை எழுப்புவதே இதன் நோக்கம்.
மு.சிவநாதன், பசவன்குடி, பெங்களூரு.
*போனில் சத்தமாக பேசுகிறார்களே....
மற்றவரின் கவனத்தை ஈர்த்தல், தாழ்வு மனப்பான்மை, கேட்பதில் குறைபாடு இதில் ஏதேனும் ஒன்றே காரணம்.
கு.பார்த்தசாரதி, வில்லியனுார், புதுச்சேரி.
*ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டுகளை என்ன செய்யலாம்?
பூஜையறையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டால் ராம நாம வங்கிக்கு அனுப்புங்கள்.
மா.திவ்யா, நாகர்கோவில், கன்னியாகுமரி.
*மனிதப் பிறவியின் நோக்கம் என்ன?
கடவுளை உணர்தல், எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்தல்.
வ.ரித்தேஷ், புரசைவாக்கம், சென்னை.
*சன்னதிக்குள் ஒருவரை ஒருவர் மோதியபடி செல்வது சரியா?
நாகரீகம் கொண்டவர்கள் மனிதர்கள். சன்னதிக்குச் செல்லும் குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு வழிவிட்டு வரிசையில் நின்று தரிசிக்கலாமே...
கு.வெங்கடேஷ், பழநி, திண்டுக்கல்.
*கலியுகம் முற்றினால் என்னாகும்
நல்லவர்கள் துன்பத்திற்கு ஆளாவர். மக்கள் கடமையை மறப்பர். இயற்கை சீற்றம் அதிகரிக்கும்.
அ.வைரவன், புளியரை, தென்காசி.
*வீட்டில் இருந்து மூன்று பேராக வெளியே செல்லக் கூடாதா...
சுபவிஷயமாக இருந்தால் மூன்று பேர் வேண்டாம். மற்றபடி தவறில்லை.