
ஆக.9 ஆடி 24: கருட பஞ்சமி. சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் தேர். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன், திருவாடானை சிநேகவல்லி அம்மனுக்கு திருக்கல்யாணம். இருக்கன்குடி மாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம்.
ஆக.10 ஆடி 25: சஷ்டி விரதம். குறுக்குத்துறை முருகப்பெருமான் திருவீதி உலா. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம். பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை.
ஆக.11 ஆடி 26: நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா. அஹோபிலமடம் 25வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை. பக்ஷிராஜர் திருநட்சத்திரம்.
ஆக.12 ஆடி 27: மதுரை மீனாட்சியம்மன் தங்கக்குதிரையில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பபாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
ஆக.13 ஆடி 28: ராமேஸ்வரம் சுவாமி நந்திகேஸ்வரர், அம்பாள் பர்வதவர்த்தினியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் பட்டினப்பிரவேசம். குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
ஆக.14 ஆடி 29: மதுரை மீனாட்சியம்மன் கனக தண்டியலில் பவனி. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம். கலிய நாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை.
ஆக.15 ஆடி 30: சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.