sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 13, 2024 10:03 AM

Google News

ADDED : ஆக 13, 2024 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக.16 ஆடி 31: ஏகாதசி, வரலட்சுமி விரதம். இருக்கன்குடி மாரியம்மன் திருவிழா. அழகர்கோவில் சுந்தரவல்லி தாயார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கபாவாடை தரிசனம்.

ஆக.17 ஆவணி 1: விஷ்ணுபதி புண்ணிய காலம். பிரதோஷம். திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமான், மன்னார்குடி ராஜகோபால சுவாமி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வரதராஜப்பெருமாளுக்கு திருமஞ்சனம்.

ஆக.18 ஆவணி 2: திருவோண விரதம். நடராஜர் அபிேஷகம். குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி. சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். கரிநாள்.

ஆக.19 ஆவணி 3: ரிக், யஜூர் உபாகர்மம். ஆவணி அவிட்டம். பவுர்ணமி. அவிநாசி சிவபெருமானுக்கு பவுர்ணமி அபிேஷகம். கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.

ஆக.20 ஆவணி 4: காயத்திரி ஜபம். சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கபூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

ஆக.21 ஆவணி 5: திருப்பதி ஏழுமலையப்பனுக்கு சகஸ்ரகலசாபிஷேகம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

ஆக.22 ஆவணி 6: முகூர்த்த நாள். மகாசங்கடஹர சதுர்த்தி. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வாஸ்து நாள் காலை 7:23 - 7:59 மணி.






      Dinamalar
      Follow us