ADDED : ஆக 13, 2024 10:02 AM

* மகாலட்சுமிக்கு உகந்த கிழமை வெள்ளி. சுக்கிரனின் அதிதேவதை இவளே.
* ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருப்பதால் இவளுக்கு சஞ்சலா, சபலா என்ற பெயரும் உண்டு.
* ஸ்ரீசூக்தம், ஸ்ரீஸ்துதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் ஆகிய பாடல்கள் இவளின் பெருமையை சொல்கின்றன.
* வரலட்சுமி விரதமிருக்கும் பெண்கள் சுமங்கலி பாக்கியம் பெறுவர்.
* மகாவிஷ்ணுவை பிரிந்த மகாலட்சுமி மீண்டும் சேர்ந்த தலம் ஸ்ரீவாஞ்சியம்.
* மகாலட்சுமியை வழிபட்ட இந்திரன் அஷ்ட ஐஸ்வர்யங்கள், ஐராவதம் என்னும் யானை, அமராவதி நகரத்தைப் பெற்றார்.
* பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், மாக்கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய பொருட்களில் வாசம் செய்கிறாள்.
* வைகுண்டத்தில் ஸ்ரீதேவி, சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி, பாதாள உலகில் நாக லட்சுமியாக இருக்கிறாள்.
* மாதுளம்பழத்தில் இருந்து தோன்றியதால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னி கர்ப்பை என்றும், ஜனகரின் மகளாகப் பிறந்ததால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் சீதை என்றும் பாற்கடலில் இருந்து தோன்றியதால் 'ஸ்ரீ' என்றும் பெயர் பெற்றாள்.
* இவளை வழிபட்டால் செல்வம், நீண்ட ஆயுள், உடல் நலம், புகழ் உண்டாகும்.