தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 22, 2024 01:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 01:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக.23 ஆவணி 7: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.

ஆக.24 ஆவணி 8: பெருவயல், திருச்செந்துார் முருகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாளுக்கு திருமஞ்சனம்.

ஆக.25 ஆவணி 9: திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், வாரியார் பிறந்த நாள். கரிநாள்.

ஆக.26 ஆவணி 10: கிருஷ்ண ஜெயந்தி. கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம், பழநி கோயில்களில் முருகப்பெருமான் புறப்பாடு. முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுதல்.

ஆக.27 ஆவணி 11: பாஞ்ச ராத்திர ஜெயந்தி. மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உற்ஸவம் ஆரம்பம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் கள்ள பிரான் பால் அபிஷேகம்.

ஆக.28 ஆவணி 12: திருச்செந்துார் முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனம். திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்.

ஆக.29 ஆவணி 13: ஏகாதசி விரதம். உப்பூர், தேரழுந்துார், திண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர், பிள்ளையார்பட்டி இத்தலங்களில் விநாயகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us