
நவ.22 கார்த்திகை 7: ராமேஸ்வரம் பார்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன் கோவில் கோமதி அம்மன் தங்க பாவாடை தரிசனம். திருத்தணி முருகன் கிளி வாகனம். திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு.
நவ.23 கார்த்திகை 8: காலபைரவாஷ்டமி. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள், திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனம். அஹோபிலமடம் 31வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். வாஸ்து நாள் (காலை 11:29 - 12:05 மணி).
நவ.24 கார்த்திகை 9: கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் அனுமன் திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்துார், திருமயம் தலங்களில் ஆண்டாள் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.
நவ.25 கார்த்திகை 10: திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிேஷகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை.
நவ.26 கார்த்திகை 11: ஏகாதசி விரதம். சுவாமிமலை முருகன் தங்கபூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஆனாய நாயனார் குருபூஜை.
நவ.27 கார்த்திகை 12: முகூர்த்த நாள். சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம். திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.
நவ.28 கார்த்திகை 13: முகூர்த்த நாள். பிரதோஷம். சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.