
மார்ச் 14 மாசி 30: காரடையான் நோன்பு. ஷடசீதி புண்ணிய காலம். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், அழகர்கோவில் கள்ளழகர் தெப்போற்ஸவம். திருப்பரங்குன்றம் முருகன் பச்சைக்குதிரை வாகனம். திருமோகூர் காளமேகப் பெருமாள் யானைமலையில் சம்ஹாரலீலை.
மார்ச் 15 பங்குனி 1: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர் அலங்கார திருமஞ்சனம். காங்கேயம் முருகப்பெருமான் விடையாற்று உற்ஸவம். வேதாரண்யம் சிவபெருமான் பவனி.
மார்ச் 16 பங்குனி 2: முகூர்த்த நாள். நத்தம் மாரியம்மன் பால் குடம். திருவாரூர் தியாகராஜர் உற்ஸவம் ஆரம்பம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
மார்ச் 17 பங்குனி 3: முகூர்த்த நாள். சங்கடஹர சதுர்த்தி. திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம். திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் உற்ஸவம் ஆரம்பம். வேதாரண்யம் சிவன் புறப்பாடு.
மார்ச் 18 பங்குனி 4: மன்னார்குடி ராஜகோபால சுவாமி உற்ஸவம் ஆரம்பம். காங்கேயம் முருகப்பெருமான் லட்ச தீபக்காட்சி. ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு. காரைக்கால் அம்மையார் குருபூஜை.
மார்ச் 19 பங்குனி 5: ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் பல்லக்கில் பவனி. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
மார்ச் 20 பங்குனி 6: திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம். சுவாமிமலை முருகன் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. கரிநாள்.