sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

காத்தருள்வாள் காமாட்சி

/

காத்தருள்வாள் காமாட்சி

காத்தருள்வாள் காமாட்சி

காத்தருள்வாள் காமாட்சி


ADDED : மார் 14, 2025 09:02 AM

Google News

ADDED : மார் 14, 2025 09:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாங்கல்ய பலம் பெருக காரடையான் நோன்பன்று படியுங்கள்.

மாங்காட்டில் வாழ்பவளே போற்றி

மகிமையுள்ள தெய்வம் நீயே போற்றி

பஞ்சாக்நி மத்தியிலே போற்றி

பரமனுக்குத் தவமிருந்த போற்றி

காஞ்சியிலே கோயில்கொண்ட போற்றி

கல்யாணக் கோலம்பூண்டாய் போற்றி

சங்கரரும் பூஜை செய்த போற்றி

சக்கரத்தில் உறைந்திட்ட போற்றி

அர்த்தமேரு அலங்கரிக்கும் போற்றி

அண்டி னோரைக் காக்கின்ற போற்றி

காஞ்சிமுனி சேவிக்கும் போற்றி

கண்கண்ட தெய்வமம்மா போற்றி

பஞ்சலோக வடிவினியே போற்றி

பக்தர் துயர் தீர்த்திடுவாய் போற்றி

ஆடிப்பூர தினத்தினிலே போற்றி

ஆனந்தமாய் வீற்றிருப்பாய் போற்றி

பங்குனிநல் உத்திரத்தில் போற்றி

பரமனைநீ மணங்கொண்டாய் போற்றி

கரும்போடு காட்சிதரும் போற்றி

கருணையுள்ள தெய்வம் நீயே போற்றி

கிளியோடு காட்சிதரும் போற்றி

கிருபைநீயும் செய்திடுவாய் போற்றி

சாந்தமாக காட்சி தரும் போற்றி

சந்தானம் தந்திடுவாய் போற்றி

சூதவனம் கோவில் கொண்ட போற்றி

சூதுகளை அகற்றிடுவாய் போற்றி

இடப்புறத்தில் அமர்ந்திட்ட போற்றி

இன்பமெல்லாம் தந்திடுவாய் போற்றி

ஆறுவாரப் பூஜை ஏற்பாய் போற்றி

ஆதி போற்றியும் நீயே போற்றி

முதல்வாரப் பூஜையிலே போற்றி

நம்குறைகள் அறிந்திடுவாள் போற்றி

இரண்டாம்வாரப் பூஜையிலே போற்றி

இன்னல்களைப் போக்கிடுவாள் போற்றி

மூன்றாம்வாரப் பூஜையிலே போற்றி

மூன்றுவரம் தந்திடுவாள் போற்றி

நான்காம் வாரப் பூஜையிலே போற்றி

நலன்கள்பல தந்திடுவாள் போற்றி

ஐந்தாம்வாரப் பூஜையிலே போற்றி

ஐயங்களைப் போக்கிடுவாள் போற்றி

ஆறாம்வாரப் பூஜையிலே போற்றி

நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் போற்றி

மாவடியில் வசித்தவளே போற்றி

மனக்குறைகள் தீர்த்திடுவாள் போற்றி

தாம்பூலம் ஏற்றிடுவாள் போற்றி

தாயாகக் காத்திடுவாள் போற்றி

கற்பூரம் ஏற்றிடுவேன் போற்றி

கலிதெய்வம் நீதானே போற்றி

புஷ்பமாலை ஏற்றிடுவாள் போற்றி

புண்ணியங்கள் தந்திடுவாள் போற்றி

காய்ச்சிட்ட பாலுடனே போற்றி

கற்கண்டும் ஏற்றிடுவாள் போற்றி

ஏலக்காய் தேனுடனே போற்றி

ஏழைகளின் துயர் தீர்ப்பாய் போற்றி

எலுமிச்சம் பழம் ஏற்பாள் போற்றி

எம்குறைகள் தீர்த்திடுவாள் போற்றி

மாலையாக காட்சிதரும் போற்றி

பாசமுடன் காத்திடுவாள் போற்றி

மங்களமாய் காட்சி தரும் போற்றி

மங்களமாய் வாழவைப்பாள் போற்றி

உத்யோகம் தந்திடுவாள் போற்றி

உன்னடியே சரணமம்மா போற்றி

அன்னை உனை வேண்டி நின்றேன் போற்றி

ஆதரிப்பாய் என்னையும் நீ போற்றி

மாங்கல்யம் தந்திடுவாள் போற்றி

மக்களையும் காத்திடுவாள் போற்றி

மணாளனைத் தந்திடுவாள் போற்றி

மழலைகளும் தந்திடுவாள் போற்றி

துாளிகளை ஏற்றிடுவாள் போற்றி

துன்பங்களைத் துடைத்திடுவாள் போற்றி

வெற்றிகளைத் தந்திடுவாள் போற்றி

வேதனைகள் போக்கிடுவாள் போற்றி

வேழமுகம் நாயகன் தாய் போற்றி

வேல்முருகன் அன்னையும் நீ போற்றி

குருநாதர் காட்டிட்ட போற்றி

குவலயத்தோர் கொண்டாடும் போற்றி

அகிலாண்ட நாயகியே போற்றி

அன்பர்குறை தீர்த்திடுவாள் போற்றி

ஆவின்பால் குடித்தவளே போற்றி

ஆனந்தம் தந்திடுவாள் போற்றி

சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் போற்றி

சீக்கிரமே அருள்தருவாய் போற்றி

கெஞ்சுகிறேன் உன்னையம்மா போற்றி

கீர்த்தியுடன் வாழவைப்பாய் போற்றி

கரம்கூப்பி வணங்குகிறேன் போற்றி

வரம் அனைத்தும் தந்திடுவாய் போற்றி

நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் போற்றி

நீதிகளைத் தந்திடுவாள் போற்றி

வறுமைகளை ஓட்டிடுவாள் போற்றி

வாழ்வுதந்து காத்திடுவாள் போற்றி

அர்ச்சனைகள் ஏற்றிடுவாள் போற்றி

அகத்தினிலே குடியிருப்பாள் போற்றி

குழந்தை நானும் மனம் மகிழ்விப்பாய் போற்றி

குமரனுடன் காட்சி தாராய் போற்றி

அன்னை தந்தை தெய்வம் நீயே போற்றி

அருள்வடிவாம் குருநீயே போற்றி

மடிசாரில் காட்சிதருபவளே போற்றி

மனவினைகள் தீர்த்திடுவாள் போற்றி

கடும்தபசு புரிந்திட்ட போற்றி

கவலைகளைக் களைந்திடுவாள் போற்றி

காமகோடி ஈஸ்வரியே போற்றி

காத்திருந்து வரமளிப்பாய் போற்றி

காஞ்சிமுனி வேண்டிநிற்கும் போற்றி

காலமெல்லாம் காத்தருள்வாய் போற்றி






      Dinamalar
      Follow us